×

புதுக்கோட்டை: விவசாயிடம் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவிப் பொறியாளர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற விவசாயிடம் தடையில்லா சான்று கொடுப்பதற்காக ரூ 5000 லஞ்சம் வாங்கிய நாகுடி கல்லணை கால்வாய் உதவி கோட்டப்பொறியாளர் தென்னரசு கைது செய்யப்பட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் பொதுப்பணிதுறை நீர்வள ஆதாரஅமைப்பு கால்லணைக்கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.இந்த அலுவலகத்தில் தென்னரசு என்ற உதவிபொறியாளரிடம், பிரபாகரன் என்ற விவசாயி அவரது சொந்த கிராமமான அத்தாணியில் போர்வெல் போடுவதற்காக தடையில்லாச் சான்று வேண்டும் என
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அத்தாணி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் என்ற விவசாயிடம் தடையில்லா சான்று கொடுப்பதற்காக ரூ 5000 லஞ்சம் வாங்கிய நாகுடி கல்லணை கால்வாய் உதவி கோட்டப்பொறியாளர் தென்னரசு கைது செய்யப்பட்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த நாகுடியில் பொதுப்பணிதுறை நீர்வள ஆதாரஅமைப்பு கால்லணைக்கால்வாய் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது.
இந்த அலுவலகத்தில் தென்னரசு என்ற உதவிபொறியாளரிடம், பிரபாகரன் என்ற விவசாயி அவரது சொந்த கிராமமான அத்தாணியில் போர்வெல் போடுவதற்காக தடையில்லாச் சான்று வேண்டும் என கோரியுள்ளார்.

தடையில்லாச் சான்று வேண்டுமென்றால் ரூபாய் 5 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என தென்னரசு பிரபாகரனிடம் கேட்டுள்ளார்.

பிரபாகரன் தடையில்லாச் சான்று பெறுவதற்கு தடையில்லா சான்றிதழ் வழங்க 5,000 லஞ்சம் கொடுப்பதாக கூறிவிட்டு லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் செய்துள்ளார்.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல்துணை கண்காணிப்பாளர் மணிகண்டன், ஆய்வாளர் பீட்டர் ஆகியோர் தலைமையில் 7பேர் கொண்ட குழு திடீரென கல்லணை கால்வாய் கோட்ட அலுவலகத்தில் உள்ளே புகுந்து சோதனையில் ஈடுபட்ட போது பிரபாகரன், உதவிபொரியாளர் தென்னரசுக்கு
வழங்கிய 5 ஆயிரம் பிடிபட்டது. இதன்பின்னர் தென்னரசு கைது செய்யப்பட்டார்.

வேறு ஏதேனும் லஞ்சம் பெற்றுள்ளாரா எனவும் தென்னரசு மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.