×

சாலை பணியால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு மாற்று இடம் தரக்கோரி அமைச்சரிடம் மனு!

 

ஈரோட்டில்  நான்கு வழிச்சாலை பணிகள் காரணமாக பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு மாற்று இடம் வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட கனிராவுத்தார்குளம் பாரதி நகர் பகுதியில் 70-க்கும் மேற்பட்ட தலித் மக்கள் நீண்ட காலம் குடியிருந்து வருகின்றனர். இந்த நிலையில், ஈரோட்டில் நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருவதால், அந்த மக்களை வீடுகளை காலி செய்யக்கூறி நெடுஞ்சாலை துறை மூலம் நோட்டீஸ் அவர்கள்  வீட்டில் ஒட்டப்பட்டது. எனினும் அவர்களுக்கு மாற்று இடம் வழங்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வீடுகளை காலிசெய்ய மறுத்தும், தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதிநகரில் 4 வழிச்சாலை பணிகளால் பாதிக்கப்படும் தலித் மக்களுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் நேற்று வீட்டுவசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு முத்துசாமியை சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் முத்துசாமி, இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.