×

சிறுநீரகம் பாதிக்கப்பட்ட காவலரின் சிகிச்சைக்கு நிதியுதவி!

பெரம்பலூர் பெரம்பலூரில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று காவலருக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிபவர் அன்பரசன். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் சிரமப்பட்டு வந்தனர். இதனை அறிந்த, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற பண உதவிகளை வழங்கினர். இதன்
 

பெரம்பலூர்

பெரம்பலூரில் சிறுநீரக பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று காவலருக்கு, மாவட்ட காவல்துறை சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரிபவர் அன்பரசன். இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை திரட்ட முடியாமல் அவரது பெற்றோர் சிரமப்பட்டு வந்தனர்.

இதனை அறிந்த, பெரம்பலூர் மாவட்ட காவல்துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து தங்களால் இயன்ற பண உதவிகளை வழங்கினர். இதன் மூலம் சுமார் 1 லட்சத்து ஆயிரத்து 50 ரூபாய் நிதி திரட்டப்பட்டது.

இந்த நலையில், பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன் நேற்று சிகிச்சைக்கான பணத்தை, காவலர் அன்பரசனின் தாயாரிடம் நேரில் வழங்கினார். அப்போது, நிதியுதவி வழங்கிய காவலர்களுக்கு, அன்பரசனின் தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து கொண்டார்.