×

உதகையில் முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்த ஆட்சியர்!

நீலகிரி நீலகிரி மாவட்டம் உதகை எச்.பி.எப் மற்றும் தலை குந்தா ஆகிய பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து செல்கின்றனரா? என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்த ஆட்சியர், அவர்களை கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட
 

நீலகிரி

நீலகிரி மாவட்டம் உதகை எச்.பி.எப் மற்றும் தலை குந்தா ஆகிய பகுதிகளில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் முக கவசம் அணிந்து செல்கின்றனரா? என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு தலா 200 ரூபாய் அபராதம் விதித்த ஆட்சியர், அவர்களை கட்டாயமாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினார். தொடர்ந்து உணவகங்களில் ஆய்வு மேற்கொண்ட அவர், உணவு அருந்திவிட்டு வெளியே செல்பவர்களை கட்டாயம் முக கவசம் அணிய அறிவுறுத்த வேண்டுமென உரிமையாளர்களிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, நீலகிரி மாவட்ட நிர்வாகம் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், வீடுகளில் இருந்து வெளியே வரும்போது பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும், சுற்றுலா பயணிகள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்திய இன்னசென்ட் திவ்யா, பேருந்துகளில் முக கவசம் அணிந்து வரும் பயணிகளை மட்டுமே நடத்துனர்கள் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறினார்.