×

உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கி ஆண் சிறுத்தை பலி!

நீலகிரி உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கிக்கொண்ட ஆண் சிறுத்தையை மீட்க வனத்துறையினர் பல மணிநேர போராடியும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் உதகை கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி ஜோதிநகரில் தனியார் தோட்டத்தில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு
 

நீலகிரி

உதகை அருகே சுருக்கு கம்பியில் சிக்கிக்கொண்ட ஆண் சிறுத்தையை மீட்க வனத்துறையினர் பல மணிநேர போராடியும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம் உதகை கட்டபெட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட எல்லநள்ளி ஜோதிநகரில் தனியார் தோட்டத்தில் காட்டுப்பன்றிக்கு வைக்கப்பட்டிருந்த சுருக்கு கம்பியில் 3 வயது மதிக்கத்தக்க ஆண் சிறுத்தை ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடியது. இதனை கண்ட அந்த பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

அதன் பேரில், வனச்சரகர் சசிகுமார் தலைமையில் வனவிலங்கு பாதுகாப்பு மீட்புக் குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு கவச உடை அணிந்து சென்று, வலையை வீசி சிறுத்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் 4 மணிநேரம் போராடி சிறுத்தையை மீட்ட நிலையில், சற்று நேரத்தில் சிறுத்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து, சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதுகுறித்து, வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து, நிலத்தில் சுருக்கு கம்பி அமைத்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உதகை சுற்றுவட்டார பகுதிகளில் அண்மை காலமாக வீட்டில் வளர்ககும் கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வரும் நிலையில், சுறுக்கு கம்பியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த சம்பவம் எல்லநள்ளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.