×

தொழில் போட்டியால் வடமாநில முகவர் படுகொலை – ஓருவர் கைது!

நாமக்கல் நாமக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக வடமாநில முகவரை அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள சோளக்காட்டில், கடந்த திங்கள் கிழமை அன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து
 

நாமக்கல்

நாமக்கல் அருகே தொழில் போட்டி காரணமாக வடமாநில முகவரை அடித்துக்கொன்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள கே.புதுப்பாளையம் பகுதியில் உள்ள சோளக்காட்டில், கடந்த திங்கள் கிழமை அன்று அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு, உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். தகவல் அறிந்த பரமத்தி வேலூர் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கொலை செய்யப்பட்ட நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சிம்புசாகர் (26) என்பதும், அவர் அசாமில் இருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்கு தொழிலாளர்களை வேலைக்கு அனுப்பும் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கே.புதுப்பாளையத்தை சேர்ந்த சத்திஸ்கர் மாநில தொழிலாளி ராஜ்மோல்(21) என்பவரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தொழில்போட்டி காரணமாக சிம்புசாகரை, ராஜ்மோல் மற்றும் அவரது நண்பர் சம்லு ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, ராஜ்மோலை கைது செய்த போலீசார், தப்பியோடிய சம்லுவை தீவிரமாக தேடி வருகின்றனர்.