×

நாகை: நெல்வயலில் இறங்கி 3கி.மீ. இறந்தவர்களின் உடலை சுமந்து செல்லும் அவலம்

நாகை மாவட்டத்தில் திருக்குவளை அடுத்துள்ளது சூரச்சவெளி கிராமம். இங்கு 50 குடும்பங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவ்வூரில் வசிக்கும் யாரேனும் உயிரிழந்து விட்டால் இவர்களுக்கு அடக்கம் செய்ய மயான இடமும் அதற்குரிய சாலை வசதியும் இல்லை. இந்த அவலம் நீடித்து வந்த நிலையில், நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 65) என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சாலை வசதி இல்லாததால், அந்த கிராம மக்கள்
 

நாகை மாவட்டத்தில் திருக்குவளை அடுத்துள்ளது சூரச்சவெளி கிராமம். இங்கு 50 குடும்பங்களில் விவசாய கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இவ்வூரில் வசிக்கும் யாரேனும் உயிரிழந்து விட்டால் இவர்களுக்கு அடக்கம் செய்ய மயான இடமும் அதற்குரிய சாலை வசதியும் இல்லை.

இந்த அவலம் நீடித்து வந்த நிலையில், நேற்று அந்த கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 65) என்பவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். இதையடுத்து உயிரிழந்தவரின் உடலை அடக்கம் செய்வதற்கு சாலை வசதி இல்லாததால், அந்த கிராம மக்கள் சூரச்சவெளி கிராமத்திலிருந்து இறந்தவரின் உடலை வாழக்கரை விவசாய வயலில் இறங்கி சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் வயல் நடுவே தூக்கி சென்றனர். அதன் பின்னர் விவசாய வயல்களுக்கு நடுவே இறந்தவரின் உடலை தூக்கிச்சென்று அடக்கம் செய்து விட்டு திரும்பிச் சென்றனர்.

இறந்தவர்களின் உடலை தூக்கி வந்த அந்த கிராம மக்கள், தங்களுக்கு திமுக மற்றும் அதிமுக ஆட்சியில் கோரிக்கையாக கேட்ட மயான இடமும் சாலை வசதியும் இதுவரை செய்து தரவில்லை என குற்றம் சாட்டும் அவர்கள் இந்த அவல நிலை காட்சியை கண்ட பிறகாவது அரசு தங்களுக்கு மயான இடமும் அதற்குரிய சாலையும் செய்து தர வேண்டுமென செல்போனில் பேசி அந்த காட்சிகளை பதிவு செய்து அதனை வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.