×

நாகை- வருவாய் துறையினரை கண்டித்து விவசாயிகள் உண்ணாவிரதம்

நாகை கல்வி அறக்கட்டளை நிலத்தில் சாகுபடி செய்யும் தங்களுக்கு சிட்டா மற்றும் அடங்கல் வழங்கக் கோரி நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் தேசிகர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் 66 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் சிட்டா, அடங்கல் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள், பயிர் காப்பீடு, விவசாய கடன் மற்றும் நகை
 

நாகை

கல்வி அறக்கட்டளை நிலத்தில் சாகுபடி செய்யும் தங்களுக்கு சிட்டா மற்றும் அடங்கல் வழங்கக் கோரி நாகை மாவட்டம் திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த வலிவலம் தேசிகர் கல்வி

அறக்கட்டளைக்கு சொந்தமான நிலத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயம் செய்து வரும் 66 பேருக்கு வருவாய்த்துறை சார்பில் சிட்டா, அடங்கல் வழங்க மறுப்பதாக கூறப்படுகிறது. இதனால், அவர்கள், பயிர் காப்பீடு, விவசாய கடன் மற்றும் நகை கடன் பெற முடியாமல் தவித்து வந்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இன்று திருக்குவளை தாலுகா அலுவலகம் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், உண்ணாவிரத போராட்டத்தை தொடரப்போவதாகவும் அவர்கள் எச்சரித்தனர். போராட்டம் காரணமாக அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.