×

நாகப்பட்டினம்- வேளாங்கண்ணியில் குவிந்த பக்தர்கள் கூட்டம் – கடற்கரையில் குளிக்க அனுமதியில்லை!

நாகப்பட்டினம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இன்று ஏராளமான வெளிமாநில பக்தர்கள் அங்கு குவிந்தனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கார், பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்துள்ளனர். பேராலயம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ,உடல் வெப்ப பரிசோதனை செய்த
 

நாகப்பட்டினம்

கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு தளர்த்தியதை தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
கடந்த 9 ஆம் தேதிமுதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் வருகை அதிகரித்தது. இன்று ஏராளமான வெளிமாநில பக்தர்கள் அங்கு குவிந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, கேரள மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கார், பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்துள்ளனர்.


பேராலயம் சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு ,உடல் வெப்ப பரிசோதனை செய்த பிறகு முககவசம் அணிந்தவர்கல் மட்டுமே சமூக இடைவெளியை பின்பற்றி அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

விடுதிகள் அனைத்தும் திறக்கப்பட்டு இருப்பதால் வெளியூரில் இருந்து வந்த பக்தர்கள் அங்கேயே தங்கி, வேளாங்கண்ணி கடைத்தெரு, கடற்கரை உள்ளிட்ட

பகுதிகளில் சென்று வருகின்றனர். கடலில் குளிக்க அனுமதிக்கப் படாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.