×

நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் நேரில் ஆய்வு

நாகை நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நிறைவடைந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக கொள்முதலுக்கு கொண்டுவரப்பட்ட நெல்மணிகள் மழையில் நினைந்து சேதமடைந்தன. இதனையடுத்து, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த, மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய
 

நாகை

நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், மத்திய உணவு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், நெல்லின் ஈரப்பதம் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி நிறைவடைந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக கொள்முதலுக்கு கொண்டுவரப்பட்ட நெல்மணிகள் மழையில் நினைந்து

சேதமடைந்தன. இதனையடுத்து, விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக நெல்லின் ஈரப்பத அளவை உயர்த்த, மத்திய அரசுக்கு, தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதன்பேரில் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுசெய்ய மத்திய உணவு மற்றும் தரகட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் யாதேந்திர ஜெயின், யூனூஸ், ஜெய்சங்கர் பசந்த் உள்ளிட்டோர் அடங்கிய குழு தமிழகம்

வந்துள்ளது. இந்நிலையில், இந்த குழுவினர், நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த சாட்டியக்குடி, வெண்மணி பகுதிகளில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வுமேற்கொண்டனர். அப்போது, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வுமேற்கொண்ட மத்திய குழுவினர், நெல் மாதிரிகளை பரிசோதனைக்காக டெல்லிக்கு எடுத்து சென்றனர். இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக தரக்கட்டுப்பாடு முதுநிலை மேலாளர் சுப்ரமணியன் உடனிருந்தார்