×

ஈரோட்டில் 381 அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் வழங்கிய அமைச்சர் முத்துசாமி!

 

ஈரோடு மாவட்டம் திண்டல்  வேலாயுத சுவாமி கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 381 அர்ச்சகர்களுக்கு ரூ.3.57 மதிப்பிலான  புத்தாடைகளை, தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார். 

ஈரோடு மாவட்டம் திண்டல் வேலாயுதசுவாமி கோயிலில் இன்று இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறையின் சார்பில், கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் சீருடைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி  தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்துகொண்டு, 381 அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் கோயில்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.3 லட்சத்து 57 ஆயிரத்து 118  மதிப்பீட்டில் 2 இணை புத்தாடைகள் மற்றும் 2 இணை சீருடைகள் வழங்கினார்.


இதன் மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து அர்ச்சகர்களும், திருக்கோயில்களில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில்களை சேர்ந்த பணியாளர்கள் பயனடைவார்கள். இந்த நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி  என்.சிவகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.