×

தொழில்முறை வரி நிர்ணயிக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம்… மாநகராட்சி பில் கலெக்டர் கைது!

மதுரை மதுரையில் தொழில்முறை வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பில் கலெக்டரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர். மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உள்பட்ட அழகப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர பிரசாத் என்பவர், தனது 2 கடைகள் மற்றும் குடோனிற்கு தொழில்முறை வரி நிர்ணயம் செய்து தர விண்ணப்பித்து உள்ளார். அதற்கு, ஜெயராமன் ரூ.4
 

மதுரை

மதுரையில் தொழில்முறை வரி நிர்ணயம் செய்ய ரூ.4 ஆயிரம் லஞ்சம் பெற்ற மாநகராட்சி பில் கலெக்டரை, லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைதுசெய்தனர்.

மதுரை மாநகராட்சி 4-வது மண்டலத்திற்கு உள்பட்ட அழகப்பன் நகர் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி அலுவலகத்தில் பில் கலெக்டராக பணிபுரிந்து வருபவர் ஜெயராமன். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஈஸ்வர பிரசாத் என்பவர், தனது 2 கடைகள் மற்றும் குடோனிற்கு தொழில்முறை வரி நிர்ணயம் செய்து தர விண்ணப்பித்து உள்ளார்.

அதற்கு, ஜெயராமன் ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை அளிக்க விரும்பாத ஈஸ்வர பிரசாத், இதுகுறித்து மதுரை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் தெரிவித்தார். அதன் பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர் ராசாயனம் தடவிய ரூ.4 ஆயிரம் பணத்தை, அவரிடம் கொடுத்து, அதனை ஜெயராமனிடம் வழங்கும்படி அறிவுறுத்தினர்.

அவ்வாறே, நேற்று ஈஸ்வரபிரசாத் நேரில் சென்று ஜெயராமனிடம் ரூ.4 ஆயிரம் லஞ்ச பணத்தை வழங்கினார். அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல் ஆய்வாளர் குமரகுரு தலைமையிலான போலீசார், பில் கலெக்டர் ஜெயராமனை கையும், களவுமாக கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.