×

அக்கா கணவரை கட்டையால் அடித்துகொன்ற மைத்துனர் கைது

மதுரை திருமங்கலம் அருகே குடும்ப தகராறை தடுக்க சென்றபோது அக்கா கணவரை அடித்துகொன்ற மைத்துனரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நேற்றிரவு ஜெயராமனுக்கும் அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அதேபகுதியை சேர்ந்த ஆதிலட்சுமியின் சகோதரர் தங்கப்பாண்டி தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயராமனை உருட்டுக் கட்டையால் தங்கபாண்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ
 

மதுரை

திருமங்கலம் அருகே குடும்ப தகராறை தடுக்க சென்றபோது அக்கா கணவரை அடித்துகொன்ற மைத்துனரை போலீசார் கைதுசெய்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மையிட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன். நேற்றிரவு ஜெயராமனுக்கும் அவரது மனைவி ஆதிலட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை அதேபகுதியை சேர்ந்த ஆதிலட்சுமியின்

சகோதரர் தங்கப்பாண்டி தடுக்க முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயராமனை உருட்டுக் கட்டையால் தங்கபாண்டி தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த ஜெயராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலின் பேரில் சம்பவ வந்த கள்ளிக்குடி போலீசார், ஜெயராமன் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பினர். சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தங்கபாண்டி மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி ஆகியோரை கைதுசெய்து, விசாரித்து வருகின்றனர்.