×

விளையாட்டு உபகரண கடையில் பயங்கர தீ விபத்து

மதுரை மதுரையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மதுரை சிம்மக்கல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது. நேற்றிரவு விற்பனை முடிந்து ரமேஷ் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை கடையில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதற்குள்
 

மதுரை

மதுரையில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையில் ஏற்பட்ட திடீர் தீவிபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தது. மதுரை சிம்மக்கல் பகுதியில் ரமேஷ் என்பவருக்கு சொந்தமான விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை செயல்பட்டு வருகிறது.

நேற்றிரவு விற்பனை முடிந்து ரமேஷ் கடையை பூட்டிவிட்டு சென்ற நிலையில், இன்று காலை கடையில் இருந்து கரும்புகை வெளிவந்துள்ளது. இதனை கண்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அதற்குள் தீ மளமளவென கடை முழுவதும் பரவி

கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இந்த விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான விளையாட்டு பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.