×

காவல் உதவி ஆணையருக்கு சோழன் சேவைச்செம்மல் விருது

மதுரை மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அதிகாரியான காவல் உதவி ஆணையர் மணிவண்ணனுக்கு, சோழன் சேவைச்செம்மல் விருது வழங்கிகௌரவிக்கப்பட்டது. பகலில் காவலர், இரவில் எழுத்தாளர் என தொடர் முயற்சியினால் ஓய்வுநேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர், இதுவரை 250 அனாதை பிணங்களை தானே முன்னினன்று நல்லடக்கம் செய்துள்ளார். மேலும், தனது தாயாரின் பெயரில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி, பல அறிஞர்களை இணைத்து ஆண்டுதோறும் கருத்தரங்கங்கள் நடத்தி வருவதுடன், புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறார்.
 

மதுரை

மதுரை மாநகர கட்டுப்பாட்டு மைய பொறுப்பு அதிகாரியான காவல் உதவி ஆணையர் மணிவண்ணனுக்கு, சோழன் சேவைச்செம்மல் விருது வழங்கி
கௌரவிக்கப்பட்டது. பகலில் காவலர், இரவில் எழுத்தாளர்

என தொடர் முயற்சியினால் ஓய்வுநேரத்தை முறையாக பயன்படுத்தி பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள அவர், இதுவரை 250 அனாதை பிணங்களை தானே முன்னினன்று நல்லடக்கம் செய்துள்ளார். மேலும், தனது தாயாரின் பெயரில் ஒரு ஆராய்ச்சி மையத்தை உருவாக்கி, பல அறிஞர்களை இணைத்து ஆண்டுதோறும் கருத்தரங்கங்கள் நடத்தி வருவதுடன், புத்தகங்களையும் வெளியிட்டு வருகிறார்.


மேலும், ஆராய்ச்சியாளர்கள் இலவசமாக பயன்பெற அனுமதிப்பது, மாணவ, மாணவிகளின் வாசிப்புத் திறனை ஊக்குவிக்கும் விதமாக 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களை தனது வீட்டில் சேர்த்து வைத்துள்ளார்.

இவரது ஆக்கபூர்வமான சேவைகளையும் பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினால் இந்த விருது வழங்கப்பட்டது. இதனை மாநகர கூடுதல் காவல் ஆணையர் டேவிட்சன் தேவ ஆசீர்வாதம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.