×

பள்ளி சுவரில் ஒட்டப்பட்ட தனது பிறந்த நாள் வாழ்த்து போஸ்டர்கள்… அதிரடியாக அகற்றிய எம்.எல்.ஏ!

கரூர் தனது பிறந்த நாளையொட்டி அரசுப்பள்ளி சற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரை திமுக எம்எல்ஏ அகற்றிய சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது. கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மாணிக்கம். இவரது பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, குளித்தலை சட்டமன்ற அலுவலகத்தில் மாணிக்கம் தனது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
 

கரூர்

தனது பிறந்த நாளையொட்டி அரசுப்பள்ளி சற்றுச்சுவரில் ஒட்டப்பட்ட போஸ்டரை திமுக எம்எல்ஏ அகற்றிய சம்பவம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர் மாணிக்கம். இவரது பிறந்த நாள் கடந்த 17ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, குளித்தலை சட்டமன்ற அலுவலகத்தில் மாணிக்கம் தனது உறவினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் கேக் வெட்டி கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில், கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

மேலும், அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து கட்சி நிர்வாகிகள் நகரின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்களை ஒட்டியதுடன், பிளக்ஸ் பேனர்களையும் வைத்து இருந்தனர். இந்த நிலையில், நேற்று முன்திம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வழியாக சென்ற எம்எல்ஏ மாணிக்கம் பள்ளிச் சுவரில் வாழ்த்து போஸ்டர்கள் அதிகளவில் ஒட்டியிருப்பதை பார்த்தார்.

இதனை அடுத்து, அவர் கட்சி தொண்டர்களை அழைத்து அவற்றை உடனடியாக அகற்றும் படி அறிவுறுத்தினார். மேலும், அவர்கள் முழுமையாக போஸ்டர்களை அகற்றிய பின்னரே அங்கிருந்து புறப்பட்டு சென்றார். எம்எல்ஏ-வின் இந்த செயல் குளித்தலை பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்று உள்ளது.