×

குமரி அரசு மருத்துவமனையில் மருத்துவ உபகரணங்கள் திருட்டு- இளைஞர் கைது!

கன்னியாகுமரி குமரி அரசு மருத்துவமனையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருடிய இளைஞரை, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரியும் மார்க்ரெட் ரோபேஜா என்பவர் நேற்று முன்தினம் மருத்துவ உபகரணங்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பயன்பாடு முடிந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் சில மருத்துவ கருவிகள்
 

கன்னியாகுமரி

குமரி அரசு மருத்துவமனையில் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை திருடிய இளைஞரை, சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.

குமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில், தனியார் பாதுகாப்பு நிறுவனம் உள்ளது. இங்கு மேலாளராக பணிபுரியும் மார்க்ரெட் ரோபேஜா என்பவர் நேற்று முன்தினம் மருத்துவ உபகரணங்களை மேற்பார்வை செய்து கொண்டிருந்தார்.

அப்போது, சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பயன்பாடு முடிந்த அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் சில மருத்துவ கருவிகள் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து அவர், ஆசாரிப்பள்ளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் எஸ்.ஐ விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். மேலும், மருத்துவமனையில் இருந்த சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர்.

அதில், கட்டிமாங்கோடு பகுதியை சேர்ந்த ஆனந்தமுருகன் (31) என்பவர் பொருட்களை திருடி சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து, அவரை கைதுசெய்த போலீசார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.