×

குமரிக்கு காரில் கடத்திவந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் – மூவர் கைது!

கன்னியாகுமரி திருப்பதியில் இருந்து கன்னியாகுமரிக்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குமரி நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில், போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது, காரில்
 

கன்னியாகுமரி

திருப்பதியில் இருந்து கன்னியாகுமரிக்கு சொகுசு காரில் கடத்திவரப்பட்ட 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக ஆரல்வாய்மொழி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், நேற்று ஆரல்வாய்மொழி போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குமரி நோக்கி வந்த சொகுசு காரை சந்தேகத்தின் பேரில், போலீசார் மறித்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, காரில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து கடத்திச்சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து, காரில் இருந்த 20 கிலோ கஞ்சா பொட்டலம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், கஞ்சாவை கடத்தியது தொடர்பாக குமரி மாவட்டம் அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஸ்டாலின், மயிலாடியை சேர்ந்த செல்லப்பா மற்றும் வடசேரியை சேர்ந்த செந்தில் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனர்.