×

புயலில் சிக்கி நாகர்கோவிலை சேர்ந்த கப்பல் ஊழியர் மாயம்!

கன்னியாகுமரி கொச்சி அருகே புயலில் சிக்கி மாயமான நாகர்கோவிலை சேர்ந்த கப்பல் ஊழியரை மீட்க கோரி, தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர். இவர் கப்பலில் இயந்திர பிரிவில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹரிபால் சேவியர் பணிபுரியும் கப்பல் கடந்த 15ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டு சென்று
 

கன்னியாகுமரி

கொச்சி அருகே புயலில் சிக்கி மாயமான நாகர்கோவிலை சேர்ந்த கப்பல் ஊழியரை மீட்க கோரி, தமிழக அரசுக்கு உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பரதர் தெருவை சேர்ந்தவர் ஹரிபால் சேவியர். இவர் கப்பலில் இயந்திர பிரிவில் வேலை பார்த்து வந்தார்.இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், ஹரிபால் சேவியர் பணிபுரியும் கப்பல் கடந்த 15ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சியில் இருந்து மங்களூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.

வழியில் டவ்தே புயலில் கப்பல் சிக்கிக் கொண்ட நிலையில், ஹரிபால் சேவியர் உள்ளிட்ட சில ஊழியர்கள் கடலில் விழுந்து விட்டதாக கூறப்படுகிறது. அவர்களில் 3 பேர் மீட்கப்பட்ட நிலையில் ஹரிபால் சேவியர் மாயமானதாக கூறப்படுகிறது.

அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், கப்பல் நிறுவனத்தினர் ஹரிபால் சேவியர் குடும்பத்திற்கு தகவல் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள், அவரை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.