×

பூதப்பாண்டி வனப்பகுதியில் வேட்டையாட முயன்ற 5 பேர் கைது- வனத்துறையினர் அதிரடி

கன்னியாகுமரி குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வனப் பகுதிக்குள் வேட்டை நாய் வைத்து விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச் சரகம் தெற்குமலை மேற்குபீட் பகுதியில் மர்மநபர்கள் சிலர் வேட்டை நாயுடன் சென்று, வன விலங்குகளை வேட்டையாட முயற்சிப்பதாக வன துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 இளைஞர்கள் வேட்டை நாயுடன் வனப்பகுதிக்குள்
 

கன்னியாகுமரி

குமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வனப் பகுதிக்குள் வேட்டை நாய் வைத்து விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

கன்னியாகுமரி வன உயிரின சரணாலயம் பூதப்பாண்டி வனச் சரகம் தெற்குமலை மேற்குபீட் பகுதியில் மர்மநபர்கள் சிலர் வேட்டை நாயுடன் சென்று, வன விலங்குகளை வேட்டையாட முயற்சிப்பதாக வன துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில், வனத்துறை அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று பார்த்தபோது, 5 இளைஞர்கள் வேட்டை நாயுடன் வனப்பகுதிக்குள் சுற்றியது தெரியவந்தது. இதனையடுத்து, 5 பேரையும் வனத்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இராமனாதிச்சன் புதூரை சேர்ந்தவர்கள் என்றும், வேட்டை நாய் மூலம் விலங்குகளை பிடிக்க முயற்சித்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து, சட்ட விரோதமாக வன விலங்குகளை வேட்டையாட முயன்ற 5 பேருக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும். இதுபோன்று வரும் காலங்களில் வேட்டையாட செல்லக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்தனர்.