×

குமரி அருகே டெம்போ வேன் மோதி பெண் வங்கி ஊழியர் பலி!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கன்னக்குறிச்சி நடுவூரை சேர்ந்தவர் கணேசன். இவர், அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சுனிதா(22). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக சுனிதா வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு
 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே இருசக்கர வாகனம் மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் தனியார் வங்கி பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள கன்னக்குறிச்சி நடுவூரை சேர்ந்தவர் கணேசன். இவர், அதே பகுதியில் தேநீர் கடை நடத்தி வருகிறார். இவரது மகள் சுனிதா(22). இவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் வங்கியில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக சுனிதா வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார்.

கன்னக்குறிச்சி கீழூர் பகுதியில் சென்றபோது சுனிதா வாகனத்தின் மீது, எதிரே ஆலங்கோட்டையை சேர்ந்த சுந்தரலிங்கம் என்பவர் ஓட்டிவந்த டெம்போ வேன் மோதி விபத்திற்குள்ளானது. இதில் டெம்டோ சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுனிதாவை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ராஜாக்காமங்கலம் போலீசார், சுனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், விபத்து குறித்து தந்தை கணேசன் அளித்த புகாரின் பேரில் ராஜாக்காமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ ஓட்டுநர் சுந்தரலிங்கத்திடம் விசாரணை மேற்காண்டு வருகின்றனர்.