×

கொரோனா விதிகளை மீறிய 246 பேருக்கு அபராதம் விதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக நேற்று 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குமரி மாவட்டம் முழுவதும் நேற்று சமூக இடைவெளி கடைபிடிக்க தவறிய மற்றும் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.51,600 வசூலானதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.2,10,118 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த
 

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக நேற்று 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநரே தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,குமரி மாவட்டம் முழுவதும் நேற்று சமூக இடைவெளி கடைபிடிக்க தவறிய மற்றும் முககவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றித்திரிந்தவர்கள் என 246 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரூ.51,600 வசூலானதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் குமரி மாவட்டத்தில் இதுவரை ரூ.2,10,118 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் 376 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மாவட்டத்தில் 13,707 குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.