×

கனரா வங்கி சேவை கட்டணத்தை குறைக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கனரா வங்கியில் நகை கடனுக்கான சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கன்னியாகுமரியில் விவசாய அமைப்புகள் சார்பில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்நடைபெற்றது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியோடு இணைந்த பிறகு அதன் நகை கடனுக்கான சேவை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து குமரி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது சிண்டிகேட் வங்கி, கனரா
 

கனரா வங்கியில் நகை கடனுக்கான சேவை கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, கன்னியாகுமரியில் விவசாய அமைப்புகள் சார்பில் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம்
நடைபெற்றது. சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியோடு இணைந்த பிறகு அதன் நகை கடனுக்கான சேவை கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்து குமரி மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கம் சார்பில் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு இன்று முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தின் போது சிண்டிகேட் வங்கி, கனரா வங்கியோடு இணைந்த பிறகு 1.5 சதவீதமாக இருந்த சேவை கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து விட்டதாகவும், இணையத்தில் நகைக்கடன் கணக்கு துவங்க, சிபில் செக்கிங், கணக்கை மூடுவதற்கு என அனைத்திற்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்க படுவதாகவும் குற்றம்சாட்டினர்.

இதனால் விவசாயிகள், கிராமப்புற ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவதாக கூறிய அவர்கள், கனரா வங்கியில் வசூலிக்கப்படும் கூடுதல் கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.