×

குமரியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா பறிமுதல் – கேரளாவை சேர்ந்த இருவர் கைது!

கன்னியாகுமரி குமரியில் இருசக்கர வாகனத்தில் கடத்தமுயன்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு ஒழுகினசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் வருவதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது
 

கன்னியாகுமரி

குமரியில் இருசக்கர வாகனத்தில் கடத்தமுயன்ற ரூ.6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கேரளாவை சேர்ந்த 2 இளைஞர்களை கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி காவல் ஆய்வாளர் திருமுருகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் இரவு ஒழுகினசேரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, போலீசார் வருவதை கண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞர்கள் வாகனத்தை திருப்பிக் கொண்டு தப்பியோட முயன்றனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களது வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்தனர்.

தொடர்ந்து அவர்களிடம் சோதனையிட்டபோது, கஞ்சா பொட்டலங்களை கடத்திச் சென்றது தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்பிலான 10 கிலோ கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, அவர்கள் திருவனந்தபுரத்தை சேர்ந்த விஷ்ணு பிரகாஷ்(22) மற்றும் அகில் ஜெயன் என்பது தெரிய வந்தது. மேலும், தேனியில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து குமரி மாவட்டத்தில் விற்பனை செய்ய முயன்றதும் தெரியவந்தது. இதனை அடுத்து, வடசேரி போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து, கைது செய்தனர்.