×

நிலத்தகராறில் விவசாயி அடித்துக்கொலை… ஓட்டுநர் போலீசில் சரண்!

தென்காசி சங்கரன்கோவில் அருகே விவாசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள ஆயாள்பட்டியை சேர்ந்தவர் சண்முகையா (60). விவசாயி. இவரது மனைவி மருதாத்தாள். இவர்களுக்கு மனோகரன், சுதாகரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சண்முகையா நேற்று காலை கிராமத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பெரியதுரை என்பவர், சண்முகையாவை
 

தென்காசி

சங்கரன்கோவில் அருகே விவாசாயி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் ஓட்டுநர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அடுத்துள்ள ஆயாள்பட்டியை சேர்ந்தவர் சண்முகையா (60). விவசாயி. இவரது மனைவி மருதாத்தாள். இவர்களுக்கு மனோகரன், சுதாகரன் என்ற 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், சண்முகையா நேற்று காலை கிராமத்தில் உள்ள தனது விவசாய தோட்டத்திற்கு நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அதே பகுதியை சேர்ந்த ஓட்டுநர் பெரியதுரை என்பவர், சண்முகையாவை தனது வாகனத்தில் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து, சிறிது நேரத்தில் பெரியதுரை பனவடலிசத்திரம் காவல் நிலையத்திற்கு சென்று, தான் சண்முகையாவை கட்டையால் அடித்து கொலை செய்து விட்டதாக கூறி சரணடைந்து உள்ளார். இதனை அடுத்து, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், கொலை செய்யப்பட்டு கிடந்த சண்முகையாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பனவடலிசத்திரம் போலீசார், வழக்குப்பதிந்து பெரியதுரையை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் நிலத் தகராறு காரணமாக சண்முகய்யாவை கொலை செய்ததாக பெரியதுரை தெரிவித்துள்ளார். எனினும் போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.