×

மனுநீதி முகாமில் ரூ.3.14 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஆட்சியர்

ஈரோடு ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்றுதென்முகம், வெள்ளோடு ஆகிய வருவாய் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களுக்கு மனுநீதிதிட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மனுநீதி திட்ட முகாமில்பொதுமக்களிடமிருந்து 194 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது. மனுக்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 48 ஆயிரம்
 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் வெள்ளோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று
தென்முகம், வெள்ளோடு ஆகிய வருவாய் கிராமத்தைச் சார்ந்த பொதுமக்களுக்கு மனுநீதிதிட்ட முகாம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் அதிமுக எம்எல்ஏ-க்கள் கே.வி.ராமலிங்கம், தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த மனுநீதி திட்ட முகாமில்பொதுமக்களிடமிருந்து 194 கோரிக்கை மனுக்களை பெறப்பட்டது. மனுக்கள் மீது உரியநடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் கதிரவன் உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் 15 பயனாளிகளுக்கு 3 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், முதியோர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கானவிலையில்லா வேட்டி, சேலைகளையும் வழங்கினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஆட்சியர் கதிரவன்,தமிழ்நாடு அரசு நீர்மேலாண்மையில் முதலிடமும், நிர்வாக திறனில் இரண்டாமிடமும் பெற்று சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறினார். மேலும், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கும் நிலைமைமாறி, தற்போது பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஆர்வத்துடன் சேர்த்துவருவதாகவும் அவர் தெரிவித்தார்.