×

பருவமழை தொடங்குவதால் ஈரோடு மாநகரில் தூர்வாரும் பணிகள் தீவிரம்

பருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த இடத்துக்கு மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளில் உள்ள நீர் நிலைகள் , சாக்கடைகளில் சேரும் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகர் பகுதியில் உள்ள நான்கு மண்டலத்திற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 10 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூர்வாரும் பணி
 

பருவமழை தொடங்குவதையொட்டி ஈரோடு மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த இடத்துக்கு மாநகராட்சி சார்பில் 60 வார்டுகளில் உள்ள நீர் நிலைகள் , சாக்கடைகளில் சேரும் கழிவுகளை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாநகர் பகுதியில் உள்ள நான்கு மண்டலத்திற்கு ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 10 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.

கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம், மூலப்பாளையம், கொல்லம்பாளையம் உள்பட மாநகர் பகுதியில் உள்ள ஓடைகளில் உள்ள கழிவு மணல்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதுவரை ஆயிரம் லோடு சாக்கடை மணல்கள் அள்ள பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் இளங்கோவன் பேசியபோது, ’’அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க இருப்பதால் அதற்கு முன்பாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள நான்கு மண்டலத்துக்கும் தலா 10 தூய்மைப் பணியாளர்கள் வீதம் 40 தூய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு உபகரணங்களுடன் சாக்கடையில் தேங்கியுள்ள மணல்களை அகற்றி வருகின்றனர். இதுபோல் நீர்நிலைகளிலும் உள்ள மணல்களை தூர்வாரி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக இந்த பணியை தொடங்கி நடந்து வருகிறது. இதுவரை ஆயிரம் லோடு மணல்கள் அகற்றப்பட்டுள்ளன’’ என்றார்.