×

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

ஈரோடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், தலமலை உள்ளிட்ட 10 வனச்சரகங்களில், இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. 6 நாட்கள் நடைபெறும் இந்த பணியில், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 400 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதியில் உள்ள மான், யானை, சிறுத்தை, புலி,
 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இதன்படி, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், ஆசனூர், தாளவாடி, கடம்பூர், கேர்மாளம், தலமலை உள்ளிட்ட 10 வனச்சரகங்களில், இந்த கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது.

6 நாட்கள் நடைபெறும் இந்த பணியில், வனப் பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவர்கள் என 400 பேர் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் வனப்பகுதியில் உள்ள மான், யானை, சிறுத்தை, புலி, செந்நாய், கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் கால்தடங்கள், எச்சம் மற்றும் நீர்நிலைகள், மரங்களில் உள்ள நகக்குறிகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு வனவிலங்குகள் கணக்கிடுவர். களப்பணியாளர்கள் 6 நபர்களை கொண்ட குழுக்களாக பிரிந்து, முதல் 3 நாட்கள் நேர்கோட்டு பாதையிலும், அடுத்த 3 நாட்கள் பகுதிவாரி பாதையிலும் கணக்கெடுப்பில் ஈடுபட உள்ளனர்.

இதற்காக அவர்களுக்கு நவீன ஜி.பி.எஸ் கருவிகள் மற்றும் திசைகாட்டும் கருவி ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது முதல் 3 நாட்கள் மற்ற விலங்குகளை வேட்டையாடி உண்ணும் விலங்குகள் குறித்தும், அடுத்த 3 நாட்கள் பிற விலங்குகள் பற்றிய கணக்கெடுப்பும் நடைபெறும் என கூறிய வனத்துறை அதிகாரிகள், கணக்கெடுப்பு பணி குறித்த அறிக்கை தமிழ்நாடு தலைமை வனக்காப்பாளருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்தனர்.