×

சத்தியமங்கலம் அருகே மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை பலி!

ஈரோடு சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை உயிரிழந்தது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த காராச்சிகொரை கிராமம், சத்தியமஙகலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. உணவு தேடி வரும் வனவிலங்குள் அவ்வப்போது விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வது வழக்கம். இதனால் விவசாய நிலங்களில் கம்பிவேலி அமைத்து உரிமையாளர்கள் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று இரவு உணவு தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண்
 

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே விவசாய தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி ஆண் காட்டுயானை உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அடுத்த காராச்சிகொரை கிராமம், சத்தியமஙகலம் புலிகள் காப்பக வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. உணவு தேடி வரும் வனவிலங்குள் அவ்வப்போது விளை நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி செல்வது வழக்கம். இதனால் விவசாய நிலங்களில் கம்பிவேலி அமைத்து உரிமையாளர்கள் பாதுகாத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று இரவு உணவு தேடி வந்த 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டுயானை ஒன்று, அந்த பகுதியில் ராமசாமி என்பவருக்கு சொந்தமான வாழைத் தோட்டத்திற்குள் செல்ல முயன்றுள்ளது. அப்போது, மின்வேலியில் சென்ற உயர்அழுத்த மின்சாரம் பாய்ந்தில் யானை பரிதாபமாக உயிரிழந்தது. காலையில் யானை உயிரிழந்து கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள், பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று யானையின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, வனத்துறை மருத்துவர்களை கொண்டு யானைக்கு பிரேத பரிசோதனை நடத்த முடிவுசெய்த அவர்கள், நிலத்தின் உரிமையாளர் ராமசாமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.