×

கொரோனாவிலிருந்து மீண்ட கோபி ஆய்வாளருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு

கோபிசெட்டிபாளையம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ஆய்வாளர்சோமசுந்தரம் பூர்ண குணமடைந்து பணிக்கு திரும்பியவருக்கு துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மலர்கொத்து அளித்தும் ஆராத்தி எடுத்தும் கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள்பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு நிகழ்ச்சிகள் , அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்பினர்நடத்திய பல்வேறு
 

கோபிசெட்டிபாளையம் காவல்நிலைய ஆய்வாளருக்கு கடந்த மாதம் 25ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பெற்று வந்த ஆய்வாளர்
சோமசுந்தரம் பூர்ண குணமடைந்து பணிக்கு திரும்பியவருக்கு துணைக்கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மலர்கொத்து அளித்தும் ஆராத்தி எடுத்தும் கைதட்டியும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என 100க்கும் மேற்பட்டவர்கள்
பணியாற்றிவருகின்றனர். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் பகுதியில் அரசு நிகழ்ச்சிகள் , அரசியல் கட்சியினர் மற்றும் தனியார் அமைப்பினர்
நடத்திய பல்வேறு நிகழ்வுகளில் பாதுகாப்பு பணியில் பங்கேற்ற கோபிசெட்டிபாளையம் காவல் ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கடந்த மாதம் 25ஆம்
தேதி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனால் அவர் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அதன் பிறகு வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் பூர்ண குணமடைந்தார்.

கொரோனாவிலிருந்து பூர்ண குணமடைந்து 23 நாட்களுக்கு பிறகு பணிக்கு திரும்பிய காவல் ஆய்வாளர் சோமசுந்திரத்திற்கு கோபிசெட்டிபாளையம்
உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் தங்கவேல் உதவி ஆய்வாளர் சிறப்பு உதவிஆய்வாளர்கள் , தலைமைக்காவலர்கள் , தனிப்பிரிவு காவலர்கள் மற்றும் காவலர்கள் என அனைவரும் காவல் ஆய்வாளருக்கு மலர் கொத்து வழங்கியும் ஆரத்தி எடுத்தும் கைதட்டியும் உற்சாக வரவேற்பளித்தனர். அதனை தொடர்ந்து காவலர்கள் மற்றும் அதிகாரிகளுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்சியடைந்தனர்.