×

கர்நாடகத்திற்கு பேருந்து சேவை நிறுத்தம் – பயணிகள் அவதி

ஈரோடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்ட பேருந்துகள் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். கர்நாடக மாநிலத்தில் வாழும் மராட்டியர்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு, அம்மாநில அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, கன்னட அமைப்பினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். இதனால், தமிழகத்தில் இருந்து, சத்தியமங்கலம் வழியாக மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள்
 

ஈரோடு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்பட்ட பேருந்துகள் திடீரென ரத்துசெய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்கு உள்ளாகினர். கர்நாடக மாநிலத்தில் வாழும் மராட்டியர்களின் வளர்ச்சி திட்டங்களுக்கு, அம்மாநில அரசு 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததற்கு கண்டனம் தெரிவித்து, கன்னட அமைப்பினர் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதனால், தமிழகத்தில் இருந்து, சத்தியமங்கலம் வழியாக மைசூர், பெங்களூர், சாம்ராஜ்நகர் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இன்று காலை திடீரென ரத்து செய்யப்பட்டன. மேலும், இன்று காலை முதல் மாலை வரை எந்த பேருந்தும், சத்தியமங்கலத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு இயக்கப்படாது என்று அரசு போக்குவரத்துகழகம் திடீரென பேருந்துகளை நிறுத்திவிட்டது. எந்தவித முன்அறிவுப்பும் இன்றி திடீரென பேருந்து சேவை ரத்து செய்யப்பட்டதால், கர்நாடக மாநிலம் செல்வதற்காக பல்வேறு இடங்களில் இருந்து சத்தியமங்கலம் வந்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். அதேபோல, கர்நாடகாவில் இருந்தும் அரசு பேருந்துகள் சத்தியமங்கலத்திற்கு இயக்கப்படவில்லை.