×

சத்தியமங்கலம் அருகே சரக்கு வேன்களில் கடத்திவந்த ரூ.25 லட்சம் குட்கா பறிமுதல் – இருவர் கைது!

ஈரோடு கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து வந்த 2 சரக்கு வேன்களை சந்கேத்தின் பேரில் நிறுத்தி
 

ஈரோடு

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு சரக்கு வாகனத்தில் கடத்திவரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான குட்கா புகையிலை பொருட்களை, நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில், சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி சோதனை சாவடியில், நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக கர்நாடகாவில் இருந்து வந்த 2 சரக்கு வேன்களை சந்கேத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர்.

இந்த சோதனையில், வேன்களில் பருத்திக்கொட்டை மூட்டைகளுக்கு அடியில் குட்கா, பான்மசாலா பொருட்களை மறைத்து கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து, 2 வேன்களிலும் இருந்து சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பொருட்களை கைப்பற்றிய போலீசார், வேன் ஓட்டுநர்கள் திருச்சியை சேர்ந்த பாலசுப்ரமணியம், கேரளாவை சேர்ந்த சல்மான் முகமதுவை பிடித்து விசாரித்தனர்.

விசாரணயில், கர்நாடகாவில் இருந்து திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளுக்கு விநியோகம் செய்வதற்காக குட்காவை கடத்திச் சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, பிடிபட்ட இருவரும் சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டனர். அங்கு இருவர் மீதும் போலீசார் வழக்குப்பததாவு செய்து கைதுசெய்தனர்.