×

100 அடி ஆழ கிணற்றில் சிக்கி தவித்த முதியவர் மீட்பு

ஈரோடு மாவட்டம் மூலக்கரை அருகே தவறி விழுந்த செல்போனை எடுக்க சென்று 100 அடி ஆழ கிணற்றில் சிக்கித்தவித்த முதியவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.மூலக்கரை அடுத்த ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (68). இன்று அவர் தனது தோட்டத்தில் உள்ள 100 ஆழ கிணற்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. செல்போனை எடுப்பதற்காக கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிய ரங்கசாமி பின்னர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார்.
 

ஈரோடு மாவட்டம் மூலக்கரை அருகே தவறி விழுந்த செல்போனை எடுக்க சென்று 100 அடி ஆழ கிணற்றில் சிக்கித்தவித்த முதியவரை தீயணைப்புத்துறையினர் மீட்டனர்.மூலக்கரை அடுத்த ஆலங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ரங்கசாமி (68). இன்று அவர் தனது தோட்டத்தில் உள்ள 100 ஆழ கிணற்றின் அருகே நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக செல்போன் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. செல்போனை எடுப்பதற்காக கிணற்றில் இருந்த தண்ணீரை மோட்டார் மூலம் வெளியேற்றிய ரங்கசாமி பின்னர் கிணற்றுக்குள் இறங்கியுள்ளார். ஆனால், மீண்டும் அவரால் வெளியே வரமுடியாத நிலையில் அவர் சத்தம் போட்டுள்ளார். இதனைகேட்டு அருகில் இருந்தவர்கள் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சுமார் அரை மணிநேர போராட்டத்திற்கு பின் கயிறு கட்டி உள்ளே இறங்கி, கிணற்றுக்குள் சிக்கி தவித்த ரங்கசாமியை பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.