×

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு குறைப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2013 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர்
 

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

ஈரோடு, திருப்பூர் மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பவானிசாகர் அணை விளங்கி வருகிறது. 105 அடி உயரம் கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்ததால், நீர்வரத்து அதிகரித்து வந்தது. இன்று காலை 8 மணி நேர நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 2013 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பவானிசாகர் அணை நீர்மட்டம் 100.39 அடியாக உள்ளது. இதனிடையே அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்திற்காக 850 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், இன்று முதல் 400 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் கீழ்பவானி பாசனத்திற்காக தொடர்ந்து வினாடிக்கு 2,300 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. வரத்தைக் காட்டிலும் திறப்பு அதிகளவு உள்ளதால், பவானிசாகர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது.