×

7 மாதங்களுக்கு பிறகு ஈரோட்டில் தனியார் பஸ்கள் இயக்கம்

தனியார் பஸ்கள் கடந்த 7 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முதற்கட்டமாக 150 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. கொரோனாவின் காரணமாக தனியார் பஸ்கள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 269 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பவானி சத்தியமங்கலம் கோபி அந்தியூர் என உள்ளூரில் மட்டும் 50 பஸ்களும், கோவை ,சேலம், திருப்பூர் ,கரூர் ,பழனி, மேட்டூர் உட்பட
 

தனியார் பஸ்கள் கடந்த 7 மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முதற்கட்டமாக 150 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவின் காரணமாக தனியார் பஸ்கள் ஈரோடு மாவட்டத்தில் இயக்கப்படாமல் இருந்து வந்தது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 269 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பவானி சத்தியமங்கலம் கோபி அந்தியூர் என உள்ளூரில் மட்டும் 50 பஸ்களும், கோவை ,சேலம், திருப்பூர் ,கரூர் ,பழனி, மேட்டூர் உட்பட வெளி மாவட்டங்களுக்கு 219 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை முதல் ஈரோட்டிலிருந்து உள்ளூருக்கும் மற்றும் வெளி மாவட்டங்களுக்கும் தனியார் பஸ்கள் இயங்க தொடங்கின. இதற்காக பஸ்கள் அனைத்தும் கிருமி நாசினியும் மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. டிரைவர்கள் கண்டக்டர்கள் முக கவசம், கிளவுஸ் அணிந்து இருந்தனர். 60 சதவீத பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். முக கவசம் அணிந்திருந்த பயணிகள் மட்டுமே பஸ்ஸிற்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் பஸ்சுக்குள் நுழைந்தவுடன் கைகளில் சனிடைசர் தெளிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் பழனிசாமி, ‘’தனியார் பஸ்கள் கடந்த 7 மாதங்களாக இயக்கப்படவில்லை. தற்போது அரசின் வழிகாட்டுதலுடன் ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் முதற்கட்டமாக 150 தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. நாள் செல்ல செல்ல மீதி உள்ள அனைத்து பசுக்களும் இயக்கப்படும்’’ என்றார்.