×

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக 50 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது அவசியமின்றி வெளியே சுற்றித்திரிந்த 50-க்கும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 20ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஈரோட்டில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனையொட்டி, ஈரோடு மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி
 

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் முழு ஊரடங்கின்போது அவசியமின்றி வெளியே சுற்றித்திரிந்த 50-க்கும் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் சூழலில், நோய் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 20ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமையில் முழு ஊரடங்கும் பிறப்பித்து தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி நேற்று ஈரோட்டில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

இதனையொட்டி, ஈரோடு மாவட்ட, மாநில எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதேபோல், மாநகர் பகுதியில் உள்ள பன்னீர்செல்வம் பார்க், சென்னிமலை ரோடு, காளைமாடு சிலை உள்ளிட்ட சோதனைச் சாவடிகளில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

அப்போது, ஊரடங்கு உத்தரவையும் மீறி சாலைகளில் மோட்டார் சைக்கிளில் அவசியமின்றி சுற்றி திரிந்தவர்களை பிடித்து அபராதம் விதித்ததுடன், அவர்களது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். அதன்படி, நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவை மீறியதாக 150 பேருக்கு அபராதம் விதித்த போலீசார், 50-க்கும் மேற்பட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.