×

“அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் பாடம் நடத்தினால் நடவடிக்கை” – செங்கோட்டையன்

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக செம்பரம்பாக்கம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று, நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள
 

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் நடத்தினால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். இதுதொடர்பாக கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, நிவர் புயல் சேதம் பெருமளவு தவிர்க்கப்பட்டதாக தெரிவித்தார். முதலமைச்சர் நேரடியாக செம்பரம்பாக்கம் மற்றும் கடலோர பகுதிகளுக்கு சென்று, நிவாரண பணிகளில் சிறப்பாக செயல்பட்டதை அனைவரும் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்ட நூலகங்களுக்கு ரூ.1.12 கோடி மதிப்பிலான ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான புத்தங்கள் வழங்கியதாகவும், நீட் தேர்வுக்கு பயிற்சி அளிப்பது குறித்து தற்போது அரசு பள்ளி ஆசிரியர்களும், பயிற்சி பெற்று வருவதாகவும் தெரிவித்தார்

மேலும், அரசுப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமும், ஆன்லைன் மூலமும் பாடம் நடத்தப்படுவதாக கூறிய அமைச்சர், ஒவ்வொரு சனிக்கிழமையும் அவர்களது சந்தேகங்களுக்கு ஆசிரியர்கள் காலை 8 மணி முதல் 12 மணி வரை விளக்கம் அளித்து வருவதாகவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர், அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பது குறித்து புகார் வந்தால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.