×

ஊரடங்கின்போது சட்ட விரோதமாக மதுவிற்பனை – பெண் கைது!

ஈரோடு சத்தியமங்கலத்தில் பொதுமுடக்கத்தின் போது சட்ட விரோதமாக மது விற்ற பெண்ணை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 245 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், நேற்று முழு ஊரடங்கின்போது விதிகளை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின பேரில், சத்தியமங்கலம் போலீசார் வடவள்ளி சாலையில் உள்ள கோழி இறைச்சி கடையில் திடீரென சோதனை மேற்கொண்டனர். அப்போது, 180 மி.லி. அளவு கொண்ட 240 மதுபாட்டில்கள் மற்றும் 375
 

ஈரோடு

சத்தியமங்கலத்தில் பொதுமுடக்கத்தின் போது சட்ட விரோதமாக மது விற்ற பெண்ணை கைதுசெய்த போலீசார், அவரிடம் இருந்து 245 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில், நேற்று முழு ஊரடங்கின்போது விதிகளை மீறி மது விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின பேரில், சத்தியமங்கலம் போலீசார் வடவள்ளி சாலையில் உள்ள கோழி இறைச்சி கடையில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 180 மி.லி. அளவு கொண்ட 240 மதுபாட்டில்கள் மற்றும் 375 மி.லி கொண்ட 5 மது பாட்டில்கள் என மொத்தம் 245 பாட்டில்களை விற்பனை செய்வதற்காக கடையில் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும், அரசு மதுபானத்தை கள்ள தனமாக விற்பனைக்கு வைத்திருந்தாக சுந்தரா (55) என்பவர் மீது வழக்குபதிவு செய்து, அவரை கைது செய்தனர். இதனிடையே, ஊரடங்கின் போது சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.