×

அப்துல் கலாம் நினைவு தினம்… தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு!

ஈரோடு அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, பசுமை இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின், 6-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ஈரோட்டில் பசுமை இயக்கம் சார்பில் நேற்று “ஐயா அப்துல் கலாம் உயிர்த்தெழுகிறார்” என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதனையொட்டி, ஈரோடு வைராபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமை இயக்க அமைப்பாளர்கள்
 

ஈரோடு

அப்துல் கலாமின் நினைவு தினத்தையொட்டி, பசுமை இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 1 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின், 6-வது நினைவு தினம் நேற்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி, ஈரோட்டில் பசுமை இயக்கம் சார்பில் நேற்று “ஐயா அப்துல் கலாம் உயிர்த்தெழுகிறார்” என்ற தலைப்பில் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது. இதனையொட்டி, ஈரோடு வைராபாளையம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பசுமை இயக்க அமைப்பாளர்கள் கலந்து கொண்டு ஏராளமான மரக் கன்றுகளை நடவு செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பசுமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் சிவக்குமார், அப்துல் கலாமின் நினைவாக தங்களது இயக்கத்தினர் இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்ததாகவும், மேலும் 8 லட்சம் மரக்கன்றுகளை இந்த மாதத்தில் நட இருப்பதாகவும் கூறினார். அடுத்தக்கட்டமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை இணைத்து “ஒரு விதை புரட்சி” என்ற திட்டத்தை தொடங்குவதாக தெரிவித்தார்.

இதன் மூலம் மரக்கன்றுகளை பராமரிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டுக்கு ஒரு முறை அப்துல் கலாம் நினைவு நாளில் ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து, மாற்று திறனாளி இளைஞர்கள், தன்னார்வலர்கள் என பலரும் ஆர்வமுடன் மரக்கன்றுகளை நடவு செய்தனர்.