×

ஈரோடு தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஐ.டி., சோதனை நிறைவு- ரூ.700 கோடி ஆணவங்கள் சிக்கியதாக தகவல்

ஈரோடு ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை இன்று நிறைவடைந்தது. இந்த சோதனையில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக பேருந்து, திருமண மண்டபம், மசாலா தயாரிப்பு என பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அரசின் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை இந்த நிறுவனம்
 

ஈரோடு

ஈரோட்டில் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமான வரி சோதனை இன்று நிறைவடைந்தது. இந்த சோதனையில், 700 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் இயங்கி வரும் தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமாக பேருந்து, திருமண மண்டபம், மசாலா தயாரிப்பு என பல்வேறு வர்த்தகம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, அரசின் பல்வேறு கட்டுமான ஒப்பந்தங்களை இந்த நிறுவனம் பெற்று, செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த 14ஆம் தேதி ஈரோடு, கோவை, மதுரை, சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 50-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், தனியார் நிறுவனத்திற்கு சொந்தான அலுவலகங்கள், இயக்குனர்களின் வீடுகள், தொழிற்சாலைகள் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

கடந்த 4 நாட்களாக நீடித்து வந்த இந்த சோதனை, இன்று முடிவுக்கு வந்தது. இந்த சோதனையில் ஏற்கனவே 20 கோடி ரூபாய் பணம் மற்றும் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள சொத்துகளின் ஆவணங்கள் உள்பட பல்வேறு முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின் மொத்த மதிப்பு சுமார் 700 கோடி ரூபாய் என வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.