×

ஈரோட்டில் 1.50 லட்சம் முக கவசங்கள் வழங்கும் பணிகள் தீவிரம்

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு உறுப்பினருக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது அரசு. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 1100 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 76 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் 19.54 லட்சம் முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும்
 

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு உறுப்பினருக்கு தலா இரண்டு முகக் கவசங்கள் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்து, அதை நடைமுறைப்படுத்தியும் வருகிறது அரசு.

அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் 1100 ரேஷன் கடைகள் உள்ளன. மாவட்டம் முழுவதும் 6 லட்சத்து 76 ஆயிரம் ரேஷன் அட்டைகள் உள்ளன. இதையடுத்து மாவட்டம் முழுவதும் 19.54 லட்சம் முகக் கவசங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் முதற்கட்டமாக 1.50 லட்சம் முகக் கவசங்கள் வழங்கும் பணியை அமைச்சர் கருப்பணன் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவச முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து அதிகாரிகள், ‘’குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் அரசின் இலவச முகக் கவசங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஒரு குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளார்களோ அந்த எண்ணிக்கைக்கு தகுந்தது போல் முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது முதற்கட்டமாக மாநகராட்சி பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக 1.50 லட்சம் முகக் கவசங்கள் விநியோகிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர்ந்து இரண்டாவது கட்டமாக 2 லட்சம் முகக் கவசங்கள் தற்போது வந்துள்ளன. மாநகராட்சி பகுதி மக்களுக்கு கொடுத்து முடித்தவுடன் டவுன் பஞ்சாயத்து பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அந்தந்த ரேஷன் கடை மூலம் முகக் கவசங்கள் வழங்கும் பணி தொடங்கப்படும்’’ என்றனர்.