×

கருஙகல்பாளையம் மாட்டு சந்தைக்கு வரத்து அதிகரிப்பு

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இன்று கூடிய மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 480-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டன. இதில், 300 பசுமாடுகளும், 120 எருமை மாடுகளும் அடங்கும். கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில், கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை விலைபோனது. கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.
 

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் இன்று கூடிய மாட்டுச்சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 480-க்கும் மேற்பட்ட மாடுகள் கொண்டுவரப்பட்டன. இதில், 300 பசுமாடுகளும், 120 எருமை மாடுகளும் அடங்கும். கடந்த வாரத்தை காட்டிலும் வரத்து அதிகமாக இருந்ததால் ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் மாடுகளை ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இதில், கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.72 ஆயிரம் வரை விலைபோனது. கன்று ரூ.3 ஆயிரம் முதல் ரூ.11 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. வரத்தான மாடுகள் 75 சதவீதம் விற்பனையானது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் அடுத்த வாரம் மாடுகள் வரத்து சற்று அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.