×

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு

ஈரோடு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு, இன்று மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சந்தைக்கு நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் கடந்த 4 வாரங்களில் இல்லாத வகையில் இன்று 450 பசுமாடுகள் உட்பட 650 மாடுகள் வரத்தானது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் ஆர்வமுடன்
 

ஈரோடு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தைக்கு, இன்று மாடுகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. சந்தைக்கு நேற்று இரவு முதலே ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து கால்நடை வளர்ப்போரும், விவசாயிகளும் தங்களது மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் கடந்த 4 வாரங்களில் இல்லாத வகையில் இன்று 450 பசுமாடுகள் உட்பட 650 மாடுகள்

வரத்தானது. இதனை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வியாபாரிகளும், வெளிமாநில வியாபாரிகளும் ஆர்வமுடன் வாங்கி சென்றனர். இந்த வார சந்தையில் கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரையிலும், கன்றுக்குட்டிகள் ரூ.9 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இன்றைய சந்தையில் வரத்தான 80 சதவீத மாடுகள் விற்பனையானதாக தெரிவித்த வியாபாரிகள் அடுத்த வாரம் இதைவிட மாடுகள் வரத்து அதிகரிக்கும் என தெரிவித்தனர்.