×

ஈரோடு ஜவுளி சந்தையில், சில்லறை வியாபாரம் அமோகம்

ஈரோடு தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்பட்டு வரும் ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. இங்கு 750-க்கும் மேற்பட்ட தினசரி கடைகளும், 350-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகளும் உள்ளது. திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து அதிகளவில் ஜவுளிகளை
 

ஈரோடு

தீபாவளி பண்டிகை நெருங்குவதால், ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லறை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் செயல்பட்டு வரும் ஜவுளி சந்தை உலக புகழ் பெற்றது. இங்கு 750-க்கும் மேற்பட்ட தினசரி கடைகளும், 350-க்கும் மேற்பட்ட வாரச்சந்தை கடைகளும் உள்ளது.

திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வியாபாரிகள் வந்து அதிகளவில் ஜவுளிகளை மொத்த வியாபாரத்திற்கு அள்ளி செல்வார்கள். கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டு இருந்த ஜவுளி சந்தை, தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மீண்டும் செயல்பட்டு வருகிறது.


தொடக்கத்தில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்த நிலையில், பொது போக்குவரத்து தொடங்கியதும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடந்து வந்தது. இந்நிலையில் தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதமே இருப்பதால் ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

இன்று கூடிய சந்தையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்திருந்தனர். இதனால் சில்லரை வியாபாரம் சுறுசுறுப்பாக நடந்தது. அதே நேரத்தில்
மொத்த வியாபாரம் மந்த நிலையிலேயே நடைபெற்றது. இதனிடையே வரும் வாரங்களில் வியாபாரம் இன்னும் விருவிருப்பாக நடைபெறும் ஜவுளி வியாபாரிகள்
நம்பிக்கை தெரிவித்தனர்.