×

ஊரடங்கு விதிமீறல் – ஈரோட்டில் ஒரே நாளில் 226 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக நேற்று நாளில் 252 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 226 வாகனங்களை பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணாக ஜூலை 5-ந்தேதி வரை தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கின் 32-வது நாளான நேற்று ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 285
 


ஈரோடு

ஈரோட்டில் ஊரடங்கை மீறியதாக நேற்று நாளில் 252 பேர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 226 வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை காரணாக ஜூலை 5-ந்தேதி வரை தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டு உள்ள நிலையில், ஊரடங்கை மீறி வாகனங்களில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி, ஊரடங்கின் 32-வது நாளான நேற்று ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 285 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 12 பேர் மீது வழக்கு பதிந்து, தலா ரூ.500 அபராதம் விதிக்கபட்டது.

இதேபோல், ஊரடங்கை மீறி சுற்றியதாக 252 பேர் மீது வழக்குகள் பதிவுசெய்த போலீசார், 222 இருசக்கரவாகனங்களும், 4 நான்கு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். நேற்று மட்டும் ரூ.1 லட்சத்து 77 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வசூல் செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் கிடுக்கிப்பிடியால் வெளியே சுற்றுபவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல், ஈரோடு பொன்னி வீதியில் அனுமதியின்றி 2 நகைக் கடைகள் செயல்பட்டு வருவதாக, மாநகராட்சி நகர்நல அலுவலர் முரளி சங்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே அந்த பகுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள் சென்று பார்த்தனர். அப்போது 2 நகைக் கடைகள் திறக்கப்பட்டு வியாபாரத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த 2 நகைக்கடைகளுக்கும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டது.