×

ஊரடங்கின்போது விதிமீறல்… ஈரோட்டில் 1,228 வழக்குகள் பதிவு, 87 வாகனங்கள் பறிமுதல்!

ஈரோடு ஈரோட்டில் நேற்று முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீத 1,228 வழக்குகள் பதிவு செய்த மாநகர போலீசார், 87 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதுமு 9
 

ஈரோடு

ஈரோட்டில் நேற்று முழு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித்திரிந்தவர்கள் மீத 1,228 வழக்குகள் பதிவு செய்த மாநகர போலீசார், 87 வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் கொரோனா 2ஆம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு, கடந்த 10ஆம் தேதி முதல் வரும் 24ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், ஞாயிற்று கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனையொட்டி, நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதுமு 9 டிஎஸ்பிக்கள் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

குறிப்பாக, ஈரோடு மாநகர் பகுதியில் முழு ஊரடங்கின்போது அவசியமின்றி பொதுமக்கள் வெளியே வருவதை தடுக்கும் பொருட்டு டவுன் டிஎஸ்பி ராஜூ தலைமையில், மாநகர் பகுதியில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, பேருந்து நிலையம், ஜி.எச். ரவுண்டானா, மேட்டூர் ரோடு, பெருந்துறை ரோடு உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீசார் தடுப்புகளை அமைத்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவசியமின்றி வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து எச்சரித்து அனுப்பிய போலீசார், சிலரது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

அதன்படி, நேற்று ஒரு நாளில் மட்டும் தேவையில்லாமல் வாகனங்களில் சுற்றித் திரிந்ததாக 802 வழக்குகளும், முக கவசம் அணிதல் உட்பட அரசின் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் வந்ததாக 226 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. மேலும், நேற்று ஒரே நாளில் 87 இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக டவுன் டிஎஸ்பி ராஜூ தெரிவித்தார்.