×

ஈரோடு: கோயில் அர்ச்சகரை கட்டையால் அடித்து உதைத்த மர்மநபர்கள்

ஈரோடு மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன்(46), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சமயசங்கிலியில் உள்ள பெருமாள் கோயிலில் அர்ச்சகராக உள்ளார். கடந்த 19ம் தேதி சீனிவாசன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, மோளகவுண்டம்பாளையம் தனியார் பள்ளி அருகே, அங்கு நின்றிருந்த 4 மர்மநபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 4பேரும் சீனிவாசனை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக அடித்து உதைத்தனர். சீனிவாசன் வலி தாங்க முடியாமல் கூச்சல்போட்டதால், அக்கம்பக்கத்தினர் வருவவதை பார்த்து அந்த 4பேரும் தப்பி சென்றனர். மர்மநபர்கள் தாக்கியதில்
 

ஈரோடு மோளகவுண்டம்பாளையம் ஜீவானந்தம் வீதியை சேர்ந்தவர் சீனிவாசன்(46), நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சமயசங்கிலியில் உள்ள பெருமாள் கோயிலில் அர்ச்சகராக உள்ளார்.

கடந்த 19ம் தேதி சீனிவாசன் டூவீலரில் சென்று கொண்டிருந்தபோது, மோளகவுண்டம்பாளையம் தனியார் பள்ளி அருகே, அங்கு நின்றிருந்த 4 மர்மநபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 4பேரும் சீனிவாசனை கட்டையாலும், கைகளாலும் சரமாரியாக அடித்து உதைத்தனர். சீனிவாசன் வலி தாங்க முடியாமல் கூச்சல்போட்டதால், அக்கம்பக்கத்தினர் வருவவதை பார்த்து அந்த 4பேரும் தப்பி சென்றனர். மர்மநபர்கள் தாக்கியதில் சீனிவாசனுக்கு தலை, கால், முகம் போன்ற இடங்களில் ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்தவர்கள் சீனிவாசனை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஈரோடு தாலுகா போலீசார், சீனிவாசனிடம் விசாரணை நடத்தி, அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய 4 மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

rep image