×

ஈரோட்டில் 3000 சதுர அடிக்கு மேலான கடைகள், வணிக நிறுவனங்கள் மூடல்!

ஈரோடு தமிழக அரசின் உத்தரவின் படி ஈரோட்டில் நேற்று முதல் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலான ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன. தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், பெரிய மால்கள் மூடப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை
 

ஈரோடு

தமிழக அரசின் உத்தரவின் படி ஈரோட்டில் நேற்று முதல் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேலான ஜவுளி கடைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் நடவடிக்கையாக, தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து உள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், பெரிய மால்கள் மூடப்பட்டு உள்ளது. மேலும், பொதுமக்கள் கூடுவதை தவிர்க்கும் வகையில், 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை மூடவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த நடைமுறை நேற்று அமலுக்கு வந்த நிலையில், ஈரோடு மாநகர் பகுதியில் 3000 சதுரடிக்கு மேலுள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், நகைக் கடைகளை நேற்று முதல் மூட மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, ஈரோடு ஆர்.கே.வி. ரோட்டில் உள்ள ஏராளமான பெரிய ஜவுளிக்கடைகள், நகைக் கடைகள் மூடப்பட்டன. இதேபோல், மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய கடைகளும் அடைக்கப்பட்டன.

இதனால், இந்த நிறுவனங்களில் பணிபுரியும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை விடுத்துள்ளனர். அவர்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகி உள்ளது. இதேபோல் கோபி, அந்தியூர், பவானி, பெருந்துறை, சத்தியமங்கலம், மொடக்குறிச்சி என ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள பெரிய கடைகள் அனைத்தும் நேற்று முதல் அடைக்கப்பட்டன.