×

மாநகராட்சி பகுதிகளில் 100 டன் குப்பைகள் அகற்றம்

ஈரோட்டில் ஆயுதபூஜையை ஒட்டி மாநகராட்சி பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதபூஜைக்காக வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட கழிவு குப்பைகள் மாநகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது. இதுதவிர, மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்ட வாழை மரம் உள்ளிட்டவை விற்பனையானது போக மீதியை வியாபாரிகள் சாலையோரம் குவியலாக விட்டுசென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை
 

ஈரோட்டில் ஆயுதபூஜையை ஒட்டி மாநகராட்சி பகுதிகளில் கொட்டப்பட்டிருந்த 100 டன் குப்பைகள் அகற்றப்பட்டு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயுதபூஜைக்காக வீடுகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களில் சுத்தம் செய்தபோது ஏற்பட்ட கழிவு குப்பைகள் மாநகராட்சியில் ஆங்காங்கே கொட்டப்பட்டுள்ளது.


இதுதவிர, மீனாட்சி சுந்தரனார் சாலை, மணிக்கூண்டு, கருங்கல்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்யப்பட்ட வாழை மரம் உள்ளிட்டவை விற்பனையானது போக மீதியை வியாபாரிகள் சாலையோரம் குவியலாக விட்டுசென்றுள்ளனர். இந்நிலையில், நேற்று காலை முதல் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இந்நிலையில், ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பையை தவிர, 250 டன் குப்பைகள் கூடுதலாக சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாழைக்கன்றுகள் உடனடியாக மக்காது என்பதால், அதனை உரமாக்க முடியாது என்றும், அவற்றை குப்பை கிடங்கில் போட்டுவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், பல இடங்களில் ஒரே இடத்தில் ஒரு டன் வரை குப்பை சேர்ந்துள்ளதாகவும், இவற்றை முழுமையாக அகற்ற குறைந்தபட்சம் 2 நாட்களாகும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், தற்போதுவரை 100 டன் குப்பை கழிவுகள் அகற்றப்பட்டு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.