×

“டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க நடவடிக்கை” – மாநகராட்சி ஆணையர்

ஈரோடு ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஆணையர் இளங்கோவன், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று அலுவலர்கள் ஆய்வுசெய்து வருவதாக கூறினார். மேலும், டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், மண்டலத்திற்கு தலா 40 தூய்மை பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு, மழைநீர் வடிகாலில் ஜேசிபி எந்திரம் மூலம்
 

ஈரோடு

ஈரோட்டில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய ஆணையர் இளங்கோவன், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதால், மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று அலுவலர்கள் ஆய்வுசெய்து வருவதாக கூறினார்.

மேலும், டெங்கு பாதிப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக கூறிய அவர், மண்டலத்திற்கு தலா 40 தூய்மை பணியாளர்கள் தனியாக நியமிக்கப்பட்டு, மழைநீர் வடிகாலில் ஜேசிபி எந்திரம் மூலம் தூர்வாரப்பட்டு வருவதாக தெரிவித்தார். கழிவுநீர் கால்வாயில் உள்ள கழிவுகள் அகற்றப்பட்டு வருவதாக தெரிவித்த ஆணையர் இளங்கோவன், மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும், சளி, இருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.